கறிவேம்பு லேகியம் என்ற கருவேப்பிலை லேகியம் :
கருவேப்பிலை பொடி
உலர்திராட்சை
கற்கண்டு பொடித்தது
உலர் திராட்சை அரைத்தது
கருவேப்பிலை லேகியம் :
1.கருவேப்பிலை பொடி 100 கிராம் .
(நிழலில் உலர்த்தி இடித்து சலித்து பொடித்தது).
2.உலர்ந்த திராட்சை பழம் 100 கிராம் ,
(விதைகளும்,காம்பு நீக்கியது )
3.கற்கண்டு பொடி 100 கிராம்,
4.பசு நெய் 1 ஸ்பூன்,
- உலர்திராட்சையை ஒவ்வொன்றாக நன்கு அரைத்த பின்பு ,
- சிறிது கருவேப்பிலை பொடியும்,
- கற்கண்டு பொடியும் சேர்த்து
- நெய் பூசிய பாத்திரத்தில் போட்டு நன்கு பிசையவும்,(கைகளில் நெய்யை தடவியிருக்கவும்)
- பிறகு சிறிது சிறிதாக மறுபடியும் மீதமுள்ள கருவேப்பிலை பொடியும் ,கற்கண்டு பொடியும் முழுவதும் சேர்த்தப்பின்பு போதுமான அளவு பிசுபிசுப்பு தன்மை இல்லை எனில் சிறிதளவு தேன் சேர்த்து கொள்ளலாம்.
- ஒரு தட்டில் நெய் தடவி அதில் செய்த மருந்தை ஒருமணி நேரம் காற்று பட வைத்திருந்து பின்பு புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு
- தினசரி காலை மாலை உணவிற்கு பின்பு கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் அளவு எடுத்து மென்று சாப்பிடவும்.10 நாட்களில் முடி உதிர்வது நிற்கும்.
- தலைமுடி கருப்பாகவும் ,அடர்த்தியாகவும் வளரும்.
- தொடர்ந்து சாப்பிட முடி நீளமாகவும் ,
- கருமையாகவும் வளரும.
- முடி நரைத்தவர்களுக்கு முடி அடியிலிருந்து கருத்து வளரும்.
- வழுக்கையிலும் முடி புதிதாக முளைக்கும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு :
கருவேப்பிலை பொடி 100 கிராம் ,
உலர் திராட்சை
கறிவேப்பிலையும் ,உலர்திராட்சையும் மட்டும் சேர்ந்த லேகியம்.
கருவேப்பிலை பொடி 100 கிராம் ,
உலர்திராட்சை 200 கிராம் ,
- உலர்திராட்சையை ஒவ்வொன்றாக நன்கு அரைத்த பின்பு
- சிறிது கருவேப்பிலை பொடி சேர்த்து நெய் பூசிய பாத்திரத்தில் போட்டு நன்கு பிசையவும்,(கைகளில் நெய்யை தடவியிருக்கவும்)
- பிறகு சிறிது சிறிதாக மறுபடியும் மீதமுள்ள கருவேப்பிலை பொடியை சிறிது சிறிதாக முழுவதும் சேர்த்தும் போதுமான அளவு பிசுபிசுப்பு தன்மை இல்லை எனில் சிறிதளவு உலர்திராட்சை அரைத்து சேர்த்து கொள்ளலாம்.
- ஒரு தட்டில் நெய் தடவி அதில் செய்த மருந்தை ஒருமணி நேரம் காற்று பட வைத்திருந்து பின்பு
- புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினசரி காலை மாலை உணவிற்கு பின்பு கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் அளவு எடுத்து மென்று சாப்பிடவும்.10 நாட்களில் முடி உதிர்வது நிற்கும்.
- தலைமுடி கருப்பாகவும் ,அடர்த்தியாகவும் வளரும்.
- தொடர்ந்து சாப்பிட முடி நீளமாகவும் ,
- கருமையாகவும் வளரும.
- முடி நரைத்தவர்களுக்கு முடி அடியிலிருந்து கருத்து வளரும்.
- வழுக்கையிலும் முடி புதிதாக முளைக்கும்.
இம்முறையை எமக்கு கூறிய அருமை நண்பர் துரைராஜ் பாலாஜி அவர்களுக்கு கோடி நன்றிகள்.
https://youtu.be/TS7_3vpKuVM
https://youtu.be/TS7_3vpKuVM







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக